NIMMATHI.COM https://nimmathi.com கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம் (CCDM) Sun, 25 Jul 2021 09:41:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7 கிறிஸ்தவர்களுக்குள் சாதியே இல்லையே! https://nimmathi.com/2021/07/25/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4/ https://nimmathi.com/2021/07/25/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4/#respond Sun, 25 Jul 2021 09:41:11 +0000 http://nimmathi.com/?p=2780 குமரி மாவட்டம் கொற்றிகோடு என்னும் ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது. மற்றொன்று ‘தலித்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது.

குமரி மாவட்டம் அருமநல்லூர் என்னும் ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது. மற்றொன்று ‘தலித்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது.

குமரி மாவட்டத்தில் தோப்பூர் என்னும் ஒரே கிராமத்தில் இரண்டு கத்தோலிக்க சபைகள் இருக்கின்றன. ஒன்று ‘வெள்ளாளர்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்கு உரியது. மற்றொன்று ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது.

குமரி மாவட்டம் ஆண்டித்தோப்பு என்னும் ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது. மற்றொன்று ‘தலித்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது.

திருநெல்வேலி மாவட்டம் நாஞ்சாங்குளத்தில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்கு உரியது. மற்றொன்று ‘தலித்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்கு உரியது.

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் ஒரே தெருவில் இரண்டு CSI உள்ளன. ஒன்று ‘நாடார்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது. மற்றொன்று ‘தலித்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்கு உரியது.

சிவகாசி சாட்சியாபுரத்தில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்கு உரியது. மற்றொன்று ‘தலித்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்கு உரியது.

மதுரையில் திருமங்கலம் என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது. மற்றொன்று ‘தலித்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்கு உரியது.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் ஒன்றாய் இருந்த CSI சபை ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்குரிய சபை என்றும் ‘தலித்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருடைய சபை என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என்ற ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’  என தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது. மற்றொன்று ‘தலித்’ என தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது. மற்றொன்று ‘தலித்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்குரியது.

விழுப்புரத்தில் “வன்னியர்” என தங்களை அழைத்துக் கொள்வோருக்கென்று தனி தேவாலயமும், ‘தலித்’ என தங்களை அழைத்துக்கொள்வோருக்கு தனி தேவாலயமும் உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒன்றாய் இருந்த CSI சபை ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருடைய சபை என்றும் ‘தலித்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருடைய சபை என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.

திருப்பூரில் ஒன்றாய் இருந்த CSI சபை ‘நாடார்’ என்று தங்களை அழைத்துக் கொள்வோருக்குரிய சபை என்றும் ‘தலித்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருடைய சபை என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.

சிவகங்கை மறைமாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், எட்டியத்திடல், ஆண்டாவூரணி, வளியன்வயல், சுக்குராபுரம் ஆகிய ஊர்களில் ‘உயர்சாதியினர்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்கும் ‘தலித்’  என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்கும் தனித்தனி கத்தோலிக்க பேராலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், ஏன் சபைகள் இப்படி சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கவேண்டும்? இது சாதி உணர்வையும் தாண்டி தீண்டாமை கொடுமை அல்லவா! இந்திய கிறிஸ்தவர்களை பற்றி முழுக்க தெரியாமல் சிலர் கிறிஸ்தவத்தில் சாதி உண்டு. ஆனால் தீண்டாமை இல்லை என்று சொல்கிறார்கள். “நாங்கள் நாடார்கள்; எங்கள் கோயிலுக்குள் தலித்துகள் வரக்கூடாது” என்று புறக்கணித்து இழிவுபடுத்துவது தீண்டாமையல்லாமல் வேறு என்ன?

தென் தமிழகத்தில் பொதுவாக ‘இரட்சணிய சேனை’ என்ற சபையில் ‘தலித்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோர் மட்டும்தான் இணைகிறார்கள். வேறு எந்த சாதியினரும் அங்கத்தினர் ஆவதில்லை. அவர்கள் பிறரை எதிர்பார்ப்பதும் இல்லை. 

கிட்டத்தட்ட எல்லா கிறிஸ்தவர்களும் திருமணம் செய்யும்போது சாதி பார்க்கிறார்கள். தங்கள் சாதியில் இணையர் கிடைக்காததால் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சில ஊர்களில் ஒரே ஆலயத்தில் ‘தலித்’ என்று தங்களை அழைத்துக்கொள்வோருக்கும், மற்றவர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் ஆராதனை நடக்கிறது. கிறிஸ்தவர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் இல்லையானால், தொழுகை நேரங்களில் ஏன் பாகுபாடு காட்டவேண்டும்?

]]>
https://nimmathi.com/2021/07/25/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4/feed/ 0
ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் பார்க்கும்போது தன் சொந்த இனத்தாரிடத்தில் பெண் பார்க்க சொன்னாரே! https://nimmathi.com/2021/07/25/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://nimmathi.com/2021/07/25/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Sun, 25 Jul 2021 07:53:02 +0000 http://nimmathi.com/?p=2776 ஆபிரகாம் தன் வேலைக்காரனை நோக்கி, “விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்; நான் வாழ்ந்துவரும் இக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும் சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்குக்கு பெண்கொள்வாய் என்றும் சொல்” என்றார். தொடக்கநூல் 24:4

கடவுள் தன்னை பின்பற்றும் மக்கள் தன்னை மட்டும்தான் கடவுளாக வழிபடவேண்டும் என்று விரும்புகிறார். அதுபோல தன்னை கடவுளாக வழிபடும் மக்கள் சிலைகளை வழிபடும் மக்களை திருமணம் செய்யக்கூடாது என்றும் விரும்பினார். அது எதற்காக என்று தெளிவாக அவரே சொல்கிறார்.

அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளவோ அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம். நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. ஏனெனில், என்னைப் பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும். இணைச் சட்டம் 7:3-4

தன் பக்தர்கள் கடவுள் அல்லாத சிலைகளை வழிபடுவோரை திருமணம் செய்தால், அவர்கள் நிஜ கடவுளைவிட்டு தன் பிள்ளைகளை பிரித்துவிடுவார்கள் என்றுதான் அப்படி திருமணம் செய்யக்கூடாது என்று சொன்னார். நாம் பெற்ற நம் பிள்ளைகள் நம்மைவிட்டுவிட்டு வேறு ஒருவரை பெற்றோராக வணங்குவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. நமக்கு இருக்கும் அந்த உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம். அதுபோல படைத்த கடவுளும் தனக்குரியதை சட்டப்படி உரிமை கோருகிறார்.

கடவுளிடம் இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருப்பதை தெரிந்திருந்த இறையடியார்கள் கடவுளின் வழிகாட்டுதலின்படி தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இறைநம்பிக்கையை தழுவிய மக்களையே திருமணம் செய்தனர்.

அந்த வகையில் ஆபிரகாமும் தன் மகனுக்கு கர்த்தரை கடவுளாக கொண்ட ஒரு பெண்ணை தன் மகனுக்கு பார்க்கவேண்டும் என்று தன் மூத்த வேலைக்காரன் எலியேசரிடம் கூறினார்.

]]>
https://nimmathi.com/2021/07/25/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0