உங்களிடம் ஒரு நேர்காணல் Click Next 1. கிறிஸ்தவ விசுவாசிகள் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதரத்துவ புரிதலோடு ஒற்றுமையாக வாழ தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சக கிறிஸ்தவரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக திருமணங்களில், "நீங்கள் எங்கள் ஜாதி இல்லை; நீங்கள் வேறுஜாதி; கீழ்ஜாதி; ஆகவே, எங்கள் மகன்/மகள், உங்கள் மகளை/மகனைத் திருமணம் செய்யமுடியாது" என்று சொல்லி சக விசுவாசிகளை புறக்கணிக்கின்றனர். நான் சாதியால் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் சாதியின் பேரில் புறக்கணிப்பது கிறிஸ்துவின் நற்செய்தி பரவுவதற்குத் தடையாக இருப்பதை உணர்கிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பை அடிப்படையாகக் கொண்ட புதிய உடன்படிக்கைச் சட்டப்படி அப்படி புறக்கணிப்பது ஏற்புடையதா? 1) ஏற்புடையதல்ல 2) ஏற்புடையது 2. சகோ, விசுவாசிகளிடையே அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டிய சகோதர ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நீங்கள் ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அதற்காக நான் கடவுளுக்கு மனதார நன்றி கூறுகிறேன். மிகுந்த மனவலியோடு இன்னொரு கேள்வி: தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள். பெரும்பாலான கிறிஸ்தவ விசுவாசிகள், பாதிரியார்கள், அருட்சகோதரிகள், போதகர்கள், பிஷப்புகள், பெரிய ஆன்மீகத் தர்க்க சாஸ்திரிகள், ஆராதனை வீரர்கள், அற்புதம் செய்பவர்கள் என்று அழைக்கப்படுவோர்கூட இன்னும் சாதி உணர்வுடன் இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் அபிப்பிராயம் என்ன? 1) அவர்களுக்கு சாதியம் தவறு என்று தெரியாது. 2) அவர்கள் சாதி உணர்வாளர்கள். 3) சாதிமறுப்பைப் பேசினால் காணிக்கை தடைபடும். 3. அன்பு சகோ, கிறிஸ்தவரில் 95% பேருக்கும் சாதி பாகுபாட்டைக் கடைபிடிப்பது பைபிள்படி பாவம் என்று முழுமையாகத் தெரியாது என்பதே யதார்த்த உண்மை. ஏனென்றால், "சாதி பார்ப்பது ஒரு கொடிய பாவம்" என்று பைபிளிலிருந்து யாரும் (போதகர்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள்) போதிக்கவில்லை. மாறாக, "ஆபிரகாம் சாதி பார்த்தார், ஏனெனில் கடவுள் மனிதனையும் ஜாதி ஜாதியாகப் பிரித்தே படைத்தார்; ஆகவே, நாமும் ஜாதி பார்க்கவேண்டும்" என்றுகூட பல போதகர்கள் போதிக்கிறார்கள். மிகவும் பிரபலமான ஊழியர்களே பலர் சாதி அடிப்படையில்தான் திருமணமே செய்திருக்கிறார்கள். பிரபலமான ஊழியர்களே சிலர் தங்கள் பெயருக்குப்பின் சாதியின் பெயரை எழுதுகிறார்கள். சாதி அடிப்படையில் கல்லறைத் தோட்டங்கள் பிரிந்திருப்பதற்கு பல்லாண்டுகள் மறைக்கல்வி கற்ற பாதிரியார்களும், . போதகர்களும்கூட உடந்தையாக இருக்கிறார்கள். இதனால்தான் சாதியம் பாவமென்று விசுவாசிகளின் மனசாட்சிக்கு தெரியவில்லை. சாதிப் பாகுபாடுகளால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்று கரிசனையோடு கற்பிக்கிறவர் இல்லாவிட்டால் மக்கள் எப்படிக் கேள்விப்படுவார்கள்? கேள்விப்படாததை மக்கள் எப்படி நம்பி, கீழ்படிவார்கள்? (ரோம. 10:14). இறைமக்களிடம், "நீங்கள் வாசிப்பதின் பொருள் உங்களுக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டால், "யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு எங்களால் தெரிந்துகொள்ள முடியும்?" (அப். 8:30-31) என்றுதான் பதில் சொல்வார்கள். சாதியம் ஒரு பாவம் என்று போதகர்கள் போதிக்காத காரணம், பெரும்பான்மையான போதகர்களே சாதி உணர்வாளர்களாக இருக்கின்றனர். ஏனென்றால், தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பதுதான் ஆன்மீகத்தின் சாராம்சம் (கலா. 5:14) என்று போதகர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். அதனால்தான், அந்த அன்புக் கொள்கைப்படி சக மனிதரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கக்கூடாது என்று இன்னும் போதகர்களே உணரவில்லை. காரணம், சாதியால் பாதிக்கப்படுபவர்களே தாங்கள் சாதியால் பாதிக்கப்படுவதை சபையில் தெரியப்படுத்துவதில்லை. ஏனென்றால், சாதியால் பாதிக்கப்படுபவர்களுக்கே பெரும்பான்மையானோருக்கு சாதி பார்ப்பது பாவமென்று உறுதியாகத் தெரியாது. ஒரு விசுவாசி, தன் போதகர் கெட்ட வார்த்தை பேசுவதையோ, விபச்சாரம் செய்வதையோ, மதுபானம் அருந்துவதையோ, திருடுவதையோ பார்த்தால் அதற்குப்பின் நிச்சயமாக அந்த போதகருடைய சபைக்கு போகமாட்டார். ஏனென்றால், அந்த செயல்களெல்லாம் பாவங்கள் என்று எல்லா விசுவாசிகளின் மனசாட்சிக்கும் தெரியும். ஆனால், தன் போதகர் சாதி பாகுபாட்டு உணர்வு உடையவரென்று அப்பட்டமாக தெரிந்தாலும் இந்த விசுவாசி அவரைப் புறக்கணிப்பதில்லை. காரணம், சாதியால் பாதிக்கப்படும் பெரும்பான்மையான விசுவாசிகளுக்குகூட சாதி பார்ப்பது ஒரு பாவம் என்று உறுதியாகத் தெரியாது. அதனால்தான் தங்களைவிட கீழ்சாதி என்று சக கிறிஸ்தவர் பலரை சகஜமாக அவமதிக்கிறார்கள். போதகர்களில் சிலர் சாதி மறுப்பாளர்களாக இருந்தாலும், அவர்கள் சாதியத்துக்கு எதிராக போதிப்பதில்லை. காரணம்: சாதி உணர்வுடைய பணக்கார விசுவாசிகள் கொடுக்கும் காணிக்கை தடைபட்டுவிடும் என்ற சுயநல பயம் ஒரு பக்கம். தன்னை தாழ்த்தப்பட்டவர் என்று பிறர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை மறுபக்கம். ஆனால், சாத்தான்தான் இந்த ஆன்மீக இருட்டடிப்புக்குப் பின்னால் செயலாற்றுகிறான் என்பதே யதார்த்த உண்மை. சரி; அவர்களை விடுவோம். இனி மீந்திருக்கும் நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்போம். நாம் தைரியமாக நீதியின் பக்கம் நிற்போமே! இனிமேல் என் குடும்பத்தில் யாருக்கு திருமணம் நடந்தாலும், என் வீட்டிலுள்ளவர்கள் யார் சாதி பார்த்தாலும், நான் சாதி பார்க்கமாட்டேன் என்று நான் உறுதி கூறுகிறேன். நீங்களும் உறுதி கூறுகிறீர்களா சகோ? 1) உறுதி கூறுகிறேன் 2) முடியாது 4. மிக்க மகிழ்ச்சி சகோ. ஒருவர் ஒரு பாவத்தை பாவம் என்று தெரிந்தே செய்வது பெரிய பாவமாகும். அது பாவம் என்று தெரிந்தும், அதை செய்யவிடாமல் தடுக்கும் வலிமை இருந்தும், அதை தடுக்க முயற்சி செய்யாமல் கடந்துசெல்வது மிகப்பெரிய பாவமாகும். அதேபோல, சாதிப் பாகுபாடுகள் பாவம் என்று தெரிந்தும் கடைபிடிப்பது பெரிய பாவமாகும். அது தவறு என்று தெரிந்தும், அதை தடுத்து நிறுத்தும் வலிமை இருந்தும், தடுத்து நிறுத்த முயற்சி செய்யாமல் கடந்து செல்வது மிகப்பெரிய பாவமாகும். "கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே தகப்பனுடைய பிள்ளைகள்' என்ற சகோதரத்துவ புரிதல் உடையவர்கள்; அவர்கள் சாதிப் பாகுபாடுகள் இல்லாமல், அன்போடு, ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்பவர்கள்" என்று பிறர் சொல்லுமளவுக்கு கிறிஸ்தவர்கள் நாம் வாழ்ந்து காட்டவேண்டும். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மணிப்பூரில் நடந்தது கிறிஸ்தவர்களிடையே நடந்த இனச் சண்டையாகும். கிறிஸ்தவர்களில் எல்லா சாதியிலும், "சாதி, இனப் பாகுபாடுகள் வேண்டாம்" என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் சாதியத்தை கிறிஸ்தவத்தைவிட்டு எளிதில் துரத்திவிடலாம். அந்த ஒருங்கிணைக்கும் ஊழியத்தை ஆவியானவரின் துணையோடு ஒரு குழுவாகச் செய்கிறோம். "கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்" என்று ஓர் ஊழியத்தை அரசாங்கத்தில் பதிவு செய்து இயங்குகிறோம். கிறிஸ்தவ சகோதரத்துவத்தை விரும்பும் கிறிஸ்தவர்கள் மட்டும் இதில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இயக்கத்தில் ஆயிரத்துக்குமேல் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். தனியாக கிடக்கும் ஒரு தென்னங் குச்சியை எளிதில் ஒடித்துவிடலாம். ஆனால், பல தென்னங்குச்சிகள் இணைந்து வாரியலாக மாறிவிட்டால் அதை எளிதில் ஒடிக்கமுடியாது. அதுபோல, சாதிப் பிசாசுக்குமுன் ஒரு சாதி மறுப்பாளன் தனியாக நின்றால் சோர்ந்து போக வாய்ப்புண்டு. ஆனால், பல சாதிமறுப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு பெரும் படையாகிவிட்டால் அந்த சக்தி மிகவும் வலிமையுடையது. சாதி மறுப்பாளர்கள் ஒன்று சேராததால்தான் இன்னும் சாதி ஒழியவில்லை என்பதே உண்மை. ஏனெனில், சாதி சங்கம் என்பது ஒரு ஒற்றுமை இயக்கமாகும். ஆகவே, ஒரு சாதி உணர்வாளரை சாதி உணர்விலிருந்து விடுவிக்க சாதி உணர்வாளர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைவிட சாதி மறுப்பாளர்களுக்குள் அதிக ஒற்றுமை தேவை. நாம் ஆவியில் ஒன்று சேர்ந்தால் உலகம் முழுவதும் சாதிமறுப்பை எளிதில் கொண்டு சென்றுவிடலாம். ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றி அரசர் சாலொமோன் சொல்லும்போது, "தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்; ஏனெனில், அவரைத் தூக்கி விட எவருமில்லை. குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்; தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்? தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம் (பிர. 4:9-12) என்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாக இணைந்து நிற்போமே! நீங்களும் இந்த ஊழியத்தில் இணைந்து நிற்கலாமே! (குறிப்பு: இதில் இணைவது உங்கள் அனுதின ஆன்மீக கடமைகளை எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் கலந்துகொள்ளும் வாராந்திர சபைக் கூடுகையை இது எந்த விதத்திலும் பாதிக்காது). நீங்களும் இந்த ஊழியத்தில் எங்களோடு இணைகிறீர்களா சகோ? 1) முடியும் 2) முடியாது இந்த T-Shirt ஐ உங்களுக்கு கொடுத்தால் உங்களால் பொதுவெளியில் அணியமுடியுமா சகோ? முடியுமென்றால், இந்த இணைப்பை (Link) சொடுக்கி(click) (9080490801) வாட்சப் எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்புங்கள்.https://wa.link/5tv3t4 1) முடியும் 2) முடியாது Time's up