028. ஏழைகள் மட்டும் தான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். பணக்காரர்களை உங்களால் மாற்ற முடியுமா ?

     உலகிலுள்ள பெரும்பாலான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தது கிறிஸ்தவர்கள்தான். உலகளாவிய பெரிய பெரிய உற்பத்தியாளர்களும் கிறிஸ்தவர்கள்தான். உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்களுடைய வரிசையில் இருப்பவர்களும் கிறிஸ்தவர்கள்தான். உலகிலேயே கிறிஸ்தவம்தான் மற்ற எல்லாவற்றைவிடவும் அதிக மக்கள்தொகை உடையதாக இருக்கிறது. உலகிலேயே மிக வேகமாக வளரும் மார்க்கமும் கிறிஸ்தவம்தான். கிறிஸ்தவர்கள்தான் ஜாதி, மத, இன பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் பணஉதவி, பொருளுதவி செய்திருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள இந்துக்களிடம் கோடிக்கணக்கில் பணமிருந்தாலும் இவற்றால் இந்திய ஏழைகளுக்கு என்ன லாபம்? வெள்ளைக்காரர்கள் இந்தியாவிற்கு வந்திருக்காவிட்டால் இந்தியர்கள் தமது கலாச்சாரப்படி கோமணம் தான் கட்டிக் கொண்டிருந்திருப்பார்கள்.

     இன்று இந்தியாவிலுள்ள பட்டணங்களிலிருந்து கிராமங்கள் வரை பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் இயேசுவின் கொள்கைகளை பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள். இயேசுவின் நற்செய்தியை கிறிஸ்தவர்கள் முதலாவது ஏழைகள், நலிந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், காயப்பட்டவர்களிடம் போய் சொல்ல ஒரு பிரதான காரணமுண்டு. இயேசு தன் சீடர்களிடம் நற்செய்திப்பணியை பற்றி கூறும்போது, ‘ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்’ (லூக். 4:18,19) என்று கூறினார். கிறிஸ்து ஒடுக்கப்பட்டோர் மேலும், ஏழைகள் நலிந்தோர் மேலும் மனுதுருகும் தெய்வம் என்பது உலகறிந்த உண்மை. மேல்தட்டுப் பணக்காரர்களின் கோரப்பிடியில் நம்பிக்கையற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த ஏழை எளிய மக்களைக் காப்பாற்றி புதுவாழ்வு கொடுப்பது முக்கியமானது என்று உணர்ந்து முதலாவது ஏழைகளுக்கு நற்செய்தி கூறப்படுகிறது. இந்துமத கோயில்களிலுள்ள சிலைகளை பார்க்கச் செல்லும் ஏழை எளிய மக்கள் வரிசையில் நின்று அவஸ்தைப்படும்போது,பணக்காரர்கள் பணத்தைக் கொடுத்து மிக எளிதில் பார்த்துவிடுகிறார்களே! கடவுள் தன்னுடைய பார்வையில் ஏழைகளையும் பணக்காரர்களையும் ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும். அதை இந்து மதத்தில் எதிர்பார்க்க முடியுமா? கிறிஸ்தவர்கள் ஏழைகளை நேசித்து, ஏற்றுக்கொள்வதை நீங்கள் பாராட்ட வேண்டும்.

நீங்கள் ஜெபிக்கும்போது ஏன் சப்தமிடுகிறீர்கள் ?