035. கிறிஸ்தவ போதனைகளின் சிறப்பு என்ன ?

     ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம் (மத். 5:28). தன் சகோதரனைப் பகைப்பதே மனித கொலை பாதகம் (1யோவா. 3:15). லஞ்சம் வாங்குவதும் (வி.ப. 23:8, யோபு. 15:34), லஞ்சம் கொடுப்பதும் (தி.பணி. 24:26,27) குற்றமாகும். விருந்துகளுக்கு செல்வந்தர்களைவிட ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழைக்க வேண்டும் (லூக். 14:12-14). எல்லோரையும் மன்னிக்க வேண்டும் (மத். 18:35). தீமை செய்தவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் (உரோ. 12:14). வரதட்சணை கேட்டு வாங்குவது குற்றம் (கொலோ. 3:5). தற்கொலை செய்வது குற்றம் (1கொரி. 6:19). பழிக்குப்பழி வாங்கக் கூடாது அது தெய்வத்திற்குரியது (உரோ. 12:19). எதிரி பசியாயிருந்தால் உணவு கொடுக்க வேண்டும் (உரோ. 12:20). ஜாதி பார்ப்பது குற்றம் (கொலோ. 3:11, யோவா. 17:21,22). ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் உயிரை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை (யோவா.15:13). பிறருக்காக ஜெபிக்க வேண்டும் (மத். 5:44) என்று பல சிறப்பு அம்சங்களை உடையது தான் கிறிஸ்தவம். மேலும் விபரங்களுக்கு புதிய ஏற்பாட்டை வாசியுங்கள். (வாசிக்கவும் மத். 5, உரோ. 12). நம்மை நாம் நேசிப்பது போலப் பிறரையும் நேசிக்க வேண்டும் என்னும் ஆன்மீக போதனை எல்லாவற்றிலும் பெரியது.

கடவுளின் ஆசியைப் பெற்றுக்கொள்ள, நாக்கில், கன்னத்தில் அலகு குத்தி, காவடி எடுத்துக்கொண்டு கால் வலிக்க நடக்க வேண்டாம். பரமாத்மாவின் அற்புதங்களை அடைய ஆணிப்படுக்கையில் உருள வேண்டாம். முதுகில் கொக்கி போடும் பறவைக்காவடி வேண்டாம். மண்ணுக்குள் மனிதனை உயிரோடு புதைக்க வேண்டாம். கோடிக்கணக்கில் பணத்தை செலவுசெய்து தங்கச்சிலை, தங்க விமானம், தங்கத்தேர், தங்கக்கதவு செய்யவேண்டாம். இந்துமதம் மக்களுடைய கோடிக்கணக்கான பணத்தை விரையமாக்குகிறது. இது சிந்தித்தால் தான் தெரியும்.

பைபிளை மனிதன்தானே எழுதினான் ?