சட்டத்தை மீறுவது பாவம் (1யோவா. 3:4). கடவுள் குடியிருக்கும் ஆலயமாகிய நம் உடலை கெடுக்கும் எந்த செயல்பாடுகளும் பாவமே. அதுபோல நம் செயல்கள் மூலம் பிறருடைய உள்ளமோ உடலோ கெடுக்கப்பட்டாலும், அவையெல்லாம் பாவம்தான். அதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கீழே தருகிறேன்.
பொய் சொல்வது, சிலைவழிபாடு, சூனியம் செய்வது, (தி.வெ.21:8), களவு செய்வது, கொலை செய்வது, விபச்சாரம் செய்வது (வி.ப. 20:13-15), கெட்டவார்த்தை பேசுவது (எபே. 4:29), பேராசை, பொறாமை, கடவுளை வெறுப்பது, தற்பெருமை, பெற்றோருக்கு கீழ்ப்படியாமை, சொல் தவறுவது, இரக்கம் இல்லாமை (உரோ. 1:29-31), முறுமுறுப்பது (பிலி. 2:14), கீழ்படியாமை (கொலோ. 3:6), பொருளாசை, வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, லஞ்சம் வாங்குவது (கொலோ. 3:5), கோள் சொல்வது (நீதி. 16:28,17:9), இரண்டகம் சதி பண்ணுதல்; (1சாமு. 15:23), ஜாதி பிரிவினைகளை உருவாக்குவது (கொலோ. 3:11), திட்டுவது, நன்றியின்மை (2திமொ. 3:2), வெளிவேஷம் (2திமொ. 3:5), பொய் தெய்வங்களை வணங்குவது (வி.ப. 20:3), வீண் பேச்சு (1திமொ. 2:16), மனித பாராட்டை விரும்புவது (மத். 23:17), வேலை செய்யாமல் சாப்பிடுவது (2தெச. 3:10), மன்னியாமை (கொலோ. 3:13, மத். 18:35), மதுபான வெறிகொள்வது (எபே. 5:18), பிறருக்கு இடறலாயிருத்தல் (1கொரி. 8:13), புத்திமதியைத் தள்ளிவிடுவது (நீதி. 15:32), ஏழைகளை ஒடுக்குவது (நீதி. 14:31) இவை எல்லாமே பாவம்தான். நன்மை செய்ய ஒருவருக்கு தெரிந்திருந்தும் அவர் அதை செய்யாவிட்டால், அதுவும் பாவம் தான் (யாக். 4:17). தயவு செய்து புதிய ஏற்பாட்டை வாசியுங்கள்.