043. நான் பாவம் செய்ததில்லையே !

     உலகில் பிறந்த, பிறக்கின்ற மனிதர்கள் எல்லாருமே பாவிகள் தான். அதை உறுதிப்படுத்தும் வசனங்களை கீழே தருகிறேன் வாசியுங்கள்.

     குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை (ச.உ. 7:20).

நம்மிடம் பாவமில்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம். உண்மையும் நம்மிடத்தில் இராது. மாறாக, நம் பாவங்களை ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றங்கள் அனைத்திலுமிருந்து நம்மை தூய்மைப்படுத்துவார். ஏனெனில், அவர் நம்பிக்கைக்கு உரியவர் நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரை பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடத்தில் இல்லை என்றாகும் (1யோவா. 1:8-10).

     நேர்மையாளரே இல்லை ஒருவர்கூட இல்லை மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை. கடவுளை தேடுபவர் எவராவது உண்டோ?எல்லாரும் நெறி பிறழ்ந்தனர் ஒருமிக்க கெட்டு போயினர் நல்லது செய்பவர் யாருமில்லை. ஒருவர்கூட இல்லை (உரோ.3:10-12).

     எல்லா மனிதரும் பாவம் செய்தனர் (உரோ.5:12).

     பாவம் செய்யாத மனிதன் ஒருவனுமில்லையே (1அர.8:46).

     தம் குற்றப்பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம்பெறாது. அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார் (நீதி.28:13).

     மேற்கண்ட வசனங்களிலிருந்து பாவமற்ற ஒருவனும் இவ்வுலகில் இல்லை என்பது புலனாகிறது. ஒருவன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போது பாவத்தோடே பிறக்கிறான். தாவீது அதைப்பற்றி விளக்கும்போது, “இதோ தீவினையோடு என் வாழ்க்கையை தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னை கருத்தாங்கினாள்” (தி.பா.51:5) என்கிறார். ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று (மத்.5:28) என்று கிறிஸ்து கூறினார். பார்வையிலேயே பாவம் செய்துவிடுகிறீர்களாம். தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள் (1யோவா. 3:15) என்று யோவான் கூறினார். தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத்தீர்ப்புக்கு ஆளாவார் ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார் (மத்;.5:22). இந்த வசனங்களின்படி நீங்கள் தூய்மையாய் இருக்கிறீர்களா? அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்படியாமைக்கு உட்படுத்தினார் (உரோ. 11:32) என்று பவுல் கூறினார். பாவமில்லாமல் பிறந்து வாழ்ந்தது இயேசு மட்டும்தான் என்று வேதம் தெளிவாக்குகிறது.

நான் சுயக்கட்டுப்பாட்டோடு வாழ்கிறேன். எனக்கு கடவுள் தேவையில்லையே !