குடிகாரர்கள் ஊருக்கு வெளியே இருக்கும் சாராயக்கடையை தேடி கண்டுபிடித்து, அவர்கள் கடினமாக உழைத்து கிடைத்த சம்பள பணத்தை கொடுத்து அங்கு கிடைக்கும் மதுபானத்தை வாங்கி குடிக்கிறார்கள். எந்த விளம்பரமுமின்றி அங்கே மதுபான வியாபாரம் மும்முரமாக நடப்பதால் அங்கே நடப்பதை நியாயமென்று கூறமுடியுமா? உழவன் வயலில் நெற்பயிரை மட்டும்தான் நடுகிறான். ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தபின், நெற்பயிரோடு களைகளும் முளைத்து வளர்ந்து நிற்கின்றன. நீங்கள் நடாமலேயே களைகள் முளைத்து வளர்வதால் களைதான் நல்லதென்று கூறமுடியுமா? நெற்பயிர் தானாக எந்த வயலிலும் முளைப்பதில்லை. நீங்கள் விரும்பாத களைகள்தான் நீங்கள் விதைக்காமலேயே முளைத்து வளர்கின்றன. எனவே, உங்கள் கோயில் தானாக நிரம்பி வழிவதால், அதுதான் சத்தியமென்று நியாயப்படுத்த முடியாது. இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது வழியும் விரிவானது அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது வழியும் மிகக் குறுகலானது இதைக் கண்டுபிடிப்போர் சிலரே (மத்.7:13,14).