எங்களுக்கு ஆயிரக்கணக்கில் தெய்வங்கள் உண்டு அவர்களாலேயே செய்யமுடியாத அற்புதத்தையா இயேசு தனியாக செய்துவிடுவார் ?
உங்களுக்கு பலகோடி தெய்வங்கள் இருந்தாலும், அவைகளை உண்மையாக வணங்கி அற்புதம் பெறமுடியாமல் கடைசியாக இயேசுவை நம்பி அற்புதங்ளைப் பெற்ற கோடிக்கணக்கான மக்களுண்டு. அதற்கு நாங்களும் சாட்சிகளாய் இருக்கிறோம். அண்மையில் ஒரு பெண்ணிடமிருந்த பேயை விரட்டும்படி ஒரு அருட்பணியாளர் பிரார்த்தனை செய்தார். அந்த பிசாசு, “நான்தான் இவளுக்குள் குடியிருந்து இவளுடைய கருவை அழித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியது. “உன் பெயரென்ன?” என்று கேட்டார். உடனே அது இந்துக்கள் வணங்கும் ஒரு கடவுளின் பெயரை (பத்திரகாளி) சொன்னது.
ஒருவர் தன் எதிரி ஒருவரை அழிக்க நினைக்கும்போது, ஒரு மந்திரவாதியிடம் சென்று பணம் கொடுத்து பில்லிசூனியம் செய்கிறார். அந்த மந்திரவாதி ‘இந்துக்கடவுள்களை’ தான் ஏவிவிட்டு அந்த குடும்பத்தை கெடுக்கிறான். பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிறிஸ்தவ போதகரிடம் வரும்போது, அவர் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார். உடனே பிசாசு ‘சுடலைமாடன்’ வந்திருக்கிறேன், ‘இசக்கிஅம்மன்’ வந்திருக்கிறேன், இந்த உயிரை எடுக்காமல் போகமாட்டேன்’ என்றுகூறி அலைக்கழித்து அந்த உடலைவிட்டு வெளியேறுவதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். பிசாசினால் பாதிக்கப்பட்டவர் யாராவது, “நான் இயேசு வந்திருக்கிறேன், இந்த உயிரை எடுக்காமல் போகமாட்டேன்” என்று எங்காவது கூறியிருப்பார்களா? அவர் மனிதர்களுடைய உயிரை வாங்க வந்தவர் அல்ல மனிதர்களைக் காப்பாற்ற தன் உயிரையே தந்த தியாகராஜன் அல்லவா? உண்மையான கடவுளை பக்தன் ஏவிவிட்டு பிறரை அழிக்க முடியுமா? இயேசுவின் நாமத்தில் பிரார்த்தனை செய்யும்போது ஆரோக்கியம், செழிப்பு, தொழில்வளர்ச்சி, நம்பிக்கை, நிம்மதி, புத்துணர்ச்சி, தைரியம், உற்சாகம் வரும். ஆனால், நீங்கள் கடவுள்கள் என்று சொல்பவர்கள் ஒருவனுடைய உடலுக்குள் புகுந்தால் அது எலும்புருக்கியாக அல்லவா மாறிவிடுகிறது! இறைவன் கருணை நிறைந்தவன் தம்மை நம்புவோருக்கு அருள் பாலிப்பவன். எல்லாவற்றையும் இழந்தவர்கூட இயேசுவை நம்பினால் எதையுமே இழக்காதவர் போல நிம்மதியோடு வாழமுடியும். இதை வாசிக்கும் சிலருக்கு என்மீது கொஞ்சம் கோபம் வரலாம். ஆனால், உண்மை எது என்பதை தயவுசெய்து கொஞ்சம் நிதானித்து அறியுங்கள். உங்கள் மதநம்பிக்கையை ஒருமுறை மறுபரிசீலனை செய்யுங்கள். சத்தியத்தை மட்டும் நம்புங்கள். உங்கள் மனசாட்சி சொல்வதற்கு கீழ்படியுங்கள். மொத்த உலக மக்களையும் பாவத்திற்குள், குற்ற மனசாட்சிக்குள் மூழ்கடித்து வைத்திருக்கிறான் சாத்தான். அவனுடைய கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வலிமை இயேசுவிடம் மட்டும் தானுண்டு. எத்தனை கோடி தீயசக்திகள் படையெடுத்து வந்தாலும் தன்னந்தனியாக நிற்கும் இயேசுவின் தெய்வீக சக்திக்குமுன் நிற்கமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஒருமுறை 6000 பிசாசுகளால் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மனிதனை இயேசு சந்தித்து ஓரே வார்த்தையால் அத்தனை பிசாசுகளையும் ஒரேயடியாக துரத்தினார் (மாற். 5:1-13). இவ்வுலகின் எல்லா அதிகாரங்களுக்கும் மேலான அதிகாரம் இயேசுவின் அதிகாரம் என்று வேதம் தெளிவாக்குகிறது (பிலி. 2:11).
அன்னையும் பிதாவும் தெய்வங்கள் தானே. அவர்களை வணங்கினால் போதாதா ?