055. நீங்கள் எங்களுடைய கோயிலுக்கு வந்தால் நாங்களும் உங்கள் கோயிலுக்கு வருகிறோம்!

நீங்கள் எங்களுடைய கோயிலுக்கு வந்தால் நாங்களும் உங்கள் கோயிலுக்கு வருகிறோம்!

உங்கள் கோயிலுக்கு என்னை அழைக்கிறீர்களே,  “இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என்னும் பலகையை என்ன செய்ய போகிறீர்கள். பிரபல பாடகர் யேசு தாஸ் புரட்சி செய்வதாக நினைத்து சபரிமலை மற்றும் குருவாயூரப்பன் கோயிலில் நுழைய முயன்றபோது அவரையே அனுமதிக்கவில்லையே! இந்திராகாந்தியின் கணவர் பெரோஸ்காந்தி இந்து அல்லாததால், அவரை பூரி ஜெகநாதர் கோயிலில் நுழைய அனுமதிக்கவில்லை. மீரா ஜாஸ்மின் என்னும் நடிகை, கேரளாவிலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு போய் வெளியே வந்தவுடன் பல்லாயிரக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். ராஜிவ் காந்தியும், சோனியா காந்தியும் சேர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் நுழைய முயன்றபோது ராஜிவ் காந்தியை உள்ளே அனுமதித்தார்கள் ஆனால், சோனியாகாந்தி ‘கிறிஸ்தவர்’ என்ற காரணத்தால் அவரை உள்ளே விட மறுத்து விட்டார்கள். திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர் கோயிலுக்கு ஜெயில்சிங் என்ற அப்போதைய கவர்னர் நுழைய முயன்றபோது அவர் சீக்கியர் என்ற காரணத்தால் உள்ளே போகவிடவில்லை.
தற்போதைய இந்து மதத்திலுள்ள அநியாயங்கள் தலைக்குமேல் போய்விட்டதால் கோடிக்கணக்கான இந்து சகோதரர்கள் உண்மையான தெய்வீக பேரொளியாம் இயேசுவிடம் தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். புரையோடிப் போன மூடநம்பிக்கைகளையும், முடைநாற்றமெடுக்கும் சாங்கியங்களையும், ஆபத்தான பாரம்பரியங்களையும் விட்டுவிட்டு நீங்கள் உண்மையை தழுவிக் கொள்ளாமல், என்னையும் இருளுக்குள் அடைக்கப் பார்க்கிறீர்களே! இது உங்களுக்கே அநியாயமாகத் தெரியவில்லையா?
இரவு 12 மணிக்கு, கிறிஸ்தவர்கள் தங்கள் ஆராதனை ஸ்தலத்துக்கு போகப் பயப்படமாட்டார்கள். ஆனால், இந்துக்கள் தாங்கள் கடவுள்கள் என்று கூறும் சிலைகளை பார்க்க நடுஇரவில் போகமுடியுமா? இதை வாசிக்கும்போதே உங்களுக்கு பயமாக இருக்கிறது அல்லவா? வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போது, ஒரு தடவைக்கு பலதடவை சோதித்துப் பார்க்கிறீர்கள். ஆன்மீக காரியத்தில் மட்டும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறீர்களே!
இந்துமத பக்தர்கள், பாபர்மசூதியை இடித்தார்கள். ஆயிரக் கணக்கான கிறிஸ்தவ ஆலயங்களை கொளுத்தினார்கள். அண்மையில் ஒரிசாவிலுள்ள கந்தமால் மாவட்டத்தில் நடந்த ஈவு இரக்கமற்ற மதவெறியாட்டத்தின் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு விலாவாரியாகத் தெரியுமே! இந்த நிலையிலிருக்கும் மனிதநேயமற்ற மத வெறியாளர்களோடு, நாங்கள் கைகோர்த்து நிற்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது மனசாட்சியுள்ள உங்களுக்கு அநியாயமாகத் தெரியவில்லையா? இந்துக்களால் எத்தனை கன்னியாஸ்திரீகள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். எத்தனை அப்பாவிக் கிறிஸ்தவர்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன!யோசித்துப் பாருங்கள். அவர்களிடம் கேட்டால், இராமர் அம்பால் கொன்றார். நாங்கள் தீக்கொளுத்திக் கொல்கிறோம், அவ்வளவுத்தான் வித்தியாசமென்று மெத்தனமாக கூறுகின்றனர். இந்த கொடுமைவாதிகள் பின்பற்றும் மிருகத்தனத்தை பின்பற்ற நான் ஆறறிவற்ற விலங்கினமா என்ன? திருடனிடம், “நீ ஏன் திருடுகிறாய், இது உனக்கு அசிங்கமாகத் தெரியவில்லையா?” என்று கேட்டால், அவன், “அந்த கடவுளே வெண்ணை திருடியிருக்கிறார். நான் திருடினால் மட்டும் ஏன் தவறென்று குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று கேட்கிறான். “உன் மனைவி உயிரோடிருக்கும்போது, வேறொரு பெண்ணோடு சகவாசம் வைத்திருப்பது அநியாயமல்லவா? என்று கேட்டால், “அந்த பரமாத்மாவே இஷ்டத்துக்கு லீலை பண்ணிருக்கும்போது, என்னை ஏன் கேள்விகேட்டு துன்புறுத்துகிறீர்கள்?”என்று நொந்து கொள்கிறான்.
இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு அறிவுரை கூறி, நாட்டின் நற்குடிமக்களாக வாழவைக்க நீங்கள் ஆசைப்படுவீர்களானால், கட்டுக்கதைகளையும், புராணப்பொய்களையும் விட்டு வெளியேறுங்கள். மதவெறி இல்லாமல் தெளிந்த சிந்தையோடு, நாடு முன்னேறவேண்டும் என்னும் முற்போக்கு கொள்கையை பின்பற்ற தைரியமாய் வெளியே வாருங்கள். சந்தனமரம் திருடிய வீரப்பனை ‘திருடன்’என்று கொன்று விட்டார்கள். ஆனால், வெண்ணை திருடியவரை தெய்வமாக ஆராதனை செய்கிறார்கள். இது நியாயமென்று கூறப்போகிறீர்களா?
“அசத்தோமா சத்கமய; தமஸ்ஸோமா ஜியோதிர்கமய; மிருத்தியோர்மா அம்ருதம்கமய” என்று பிருகதாரண்யக உபநிஷத்து முழங்குகிறது. ‘அசத்யா‘ என்றால் பொய் என்றும் ‘சத்யா‘ என்றால் சத்தியம் என்றும் அர்த்தம். இயேசுவே தன் சீடர்களைப் பார்த்து, “நானே சத்தியம்” (யோவா.14:6) என்று உறுதியாக கூறினார். இயேசுவைத் தவிர இவ்வுலகில் வந்த வேறெந்த மாமனிதர்களோ, அவதாரங்கள் என்று அழைக்கப்படுபவர்களோ இப்படி ஒரு அறிக்கையை கூறவில்லை. என் மூலமாக அல்லாமல் வேறெந்த வழியாலும் பரப்பிரம்மத்தை அடைய முடியாது (யோவா.14:6) என்று இயேசு அறுதியிட்டு கூறினார். வேறு யாருமே இப்படி ஒரு கூற்றை கூறி நான் கேள்விப்பட்டதில்லை. இயேசுவே சத்தீஸ்வரன்.
“தமஸ்”, என்றால் இருள் என்றும் “ஜோதி“,என்றால் ஒளி என்றும் அர்த்தம். இயேசுதான் இந்த மொத்த உலகத்தையும் வழி நடத்தும் வலிமையுடைய ஜோத்தீஸ்வரன். அவர்தான் இருளில் கிடக்கும் மக்களை ஒளிக்குள் கொண்டுவரும் அருட்பெரும் ஜோதி என்பதை வேதம் கோடிட்டுக் காட்டுகிறது. ஒருமுறை இயேசு தன் சீடர்களிடம். “உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவா. 8:12) என்று திருவாய் மலர்ந்தார். இன்று ஒளியாம் இயேசுவிடம் இருளின் மக்கள் பலரால் வரமுடியாத காரணமென்ன என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கான பதிலை பரமேஷ்வரன் தன் அருளுரையில் தெளிவாக்குகிறார்.“தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்.தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடுமென அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.உண்மைக்கேற்ப வாழ்பவர்கள், ஒளியிடம் வருகிறார்கள்” (யோவா. 3:20,21) என்று பரமாத்மா கூறினார். இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் ஒருவன் தான் பாவியாக வாழ்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்கிறான். இயேசுவை சந்திப்பதுவரை ஒரு ‘பத்தரைமாற்று தங்கம்’ என்றே வெளியுலகிற்குக் காட்டுகிறான். மனிதனுடைய உள்மனம் எவ்வளவு பாவமாசு படிந்துள்ளது என்பதை இவ்வுலக மக்களுக்கு தெளிவாக எடுத்தரைத்து, வெளிப்படுத்தியது ஜோதிஸ்வரன் இயேசு மட்டும்தான். கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள பகைமை நிலையை உலகிற்கு இயேசுவே வெளிப்படுத்தினார்.
மிருதா‘ என்றால் மரணம்  என்றும் ‘அம்ருதா‘ என்றால் ஜீவன் என்றும் அர்த்தம். இயேசு தன் சீடர்களைப் பார்த்து, “நானே ஜீவன்” (யோவா.14:6) என்று கூறினார்.“கிறிஸ்துவை உடையவர் ஜீவனை உடையவர் அவரைக் கொண்டிராதவர் ஜீவனைக் கொண்டிராதவர்” (1யோவா. 5:12) என்று யோவான் சுட்டுகிறார். இயேசுவை ஏற்றுக்கொண்டு மீட்புப் பெறாதவர் ஆன்மீக மரணத்தில் நிலைகொண்டிருக்கிறார். என் வசனத்தை கேட்டு என்னை அனுப்பினவரை நம்புவோர் நிலை வாழ்வை கொண்டுள்ளனர்; அவர்கள் தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவை கடந்து வாழ்வுக்குள் வந்து விட்டார்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்” (யோவா. 5:24) என்று இயேசு முத்திரையிட்டு பேசுகிறார். இயேசுதான் நமக்கு நல்வாழ்வு தரும் ஜீவேஸ்வரன். இதுவரை வாழ்ந்த எவருமே ‘நான்தான் ஜீவன், என்று கூறவில்லை.
இயேசு,“என்னிடம் பாவமுண்டு என்று உங்களில் யாரென்னைக் குற்றம் சாட்டமுடியும்?” என்றுதைரியமாய் கேட்டார். “நான் பரிசுத்தமாய் வாழ்ந்ததுபோல் நீங்களும் பரிசுத்தமாய் வாழுங்கள்” என்று தன் மக்களுக்கு அறிவுரை கூறிய புருஷோத்தமன் இயேசுவை புறக்கணித்துவிட்டு ‘குற்றவாளிக் கதாபாத்திரங்களை’ நான் எப்படி கடவுளென்று மனதார ஏற்றுக்கொள்ள முடியும்? எனக்காக உயிரைக்கொடுத்த என் ஆருயிர் நண்பன் இயேசுவை வெறுத்து நான் வேறுவழியை தேர்ந்தெடுத்தால் நான் நன்றி கெட்டவனாய் இருப்பேன்.
கடவுள் செய்த குற்றத்தை சகிக்க முடியாமல் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் என்னும் பக்தர் குற்றம் சாட்டுகிறார். நிஜமாகவே கடவுள் குற்றம் செய்ய முடியுமா? ‘சிவம்’ என்றால் “அன்பு” என்று அர்த்தம்.‘பரமசிவம்’ என்றால் “பரலோக அன்பு (உன்னத அன்பு)” என்று அர்த்தம். ‘சதாசிவம்’ என்றால், ‘எப்போதும் அன்பாயிருப்பவர்’ என்று அர்த்தம். அப்படிப்பட்ட சதாசிவபெருமானை குற்றவாளி என்று ஒருவர் குற்றம் சாட்டமுடியுமா? கடவுளை குற்றவாளியாக, திருடனாக, காமக்கண்ணனாக, ஏமாற்றுக்காரனாக, கொலைகாரனாக இந்துக்கள் பார்ப்பதுபோல் என் மனதுக்குள் நினைத்தே பார்க்க முடியவில்லை. கடவுள் ‘அருட்பெரும் ஜோதியாக, தனிப்பெரும் கருணையாக இருக்கிறார்’ என்று ஸ்ரீ இராமலிங்க அடிகளார் கூறினார். அதையே நானும் நம்புகிறேன். பாலபிஷேகம், நெய்யபிஷேகம், அன்னாபிஷேகம் என்று லட்சக்கணக்கான பணத்தை விரயமாக்குவதற்கு நான் எப்படி துணைபோக முடியும்.

கிறிஸ்தவத்தை கடைபிடிப்பது கடினம். என்னால் நிலைத்து நிற்க முடியாது.