072. என் பெற்றோரும் என் பிள்ளைகளும் பக்தியுடையவர்களாக இருந்தால் போதாதா ?

என் பெற்றோரும் என் பிள்ளைகளும் பக்தியுடையவர்களாக இருந்தால் போதாதா ?

உங்கள் தந்தையும், உங்கள் மகனும் வயிறு நிரம்ப உணவு உண்டால் நீங்கள் உணவு உண்ட திருப்தி உங்களுக்கு உண்டாகுமா? வயிற்றுவலி வந்தவனுக்குத்தான் தெரியும் அதன் கொடூரம். ஒரு நோய்க்காக உங்களுக்கு ஊசி போடவேண்டுமென்று மருத்துவர் கூறினால், உங்களுக்கு வலிக்கும் என்பதற்காக உங்கள் மகனுக்கு போட முடியுமா? அப்படிப் போட்டால் உங்கள் நோய் குணமாகுமா?
“நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய்” (யோவா. 11:40). “இதோ நான் விரைவில் வருகிறேன் அவரவர் செயலுக்கேற்ப அவரவருக்கு நானளிக்கும் கைம்மாறு என்னிடமுள்ளது” (தி.வெ. 22:12) என்று இயேசு கூர்மையாக கூறினார். ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார் (கலா. 6:7). கடவுள் அவரவர் செயல்களுக்கு தக்கவாறு அவரவருக்குப் பலனளிப்பார் (உரோ. 2:6). நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக்குறித்து கடவுளுக்குக் கணக்கு கொடுப்பார் (உரோ. 14:12).
நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பு நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைமாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும் (2கொரி. 5:10). கிறிஸ்துவின் வருகையில் ஒரே படுக்கையில் படுத்திருக்கும் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார். ஒருவர் கைவிடப்படுவார் (லூக். 17:34). தயவுசெய்து கீழ்காணும் வேதவசனங்களை வாசியுங்கள் (யோபு.34:11, தி.பா.18:20).

என் ஜாதியையும் ஜனங்களையும் எப்படி புறக்கணிக்க முடியும் ?