091. எனக்கு பல ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. இயேசுவை நம்பினால் வேலை கிடைக்குமா ?

எனக்கு பல ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. இயேசுவை நம்பினால் வேலை கிடைக்குமா ?

சர்வ சக்தீஸ்வரன் கூறுகிறார், “என்னிடம் மன்றாடு உனக்கு நான் செவிசாய்ப்பேன். நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்” (எரே. 33:3).
ஒருமுறை இயேசு தன் சீடர்களைப் பார்த்து, “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் ஏனெனில் கேட்போர் எல்லோரும் பெற்றுக்கொள்கின்றனர் தேடுவோர் கண்டடைகின்றனர் தட்டுவோருக்கு திறக்கப்படும் உங்களுக்குள் எவராவது ஒருவர் அப்பத்தை கேட்கும் தன் பிள்ளைகளுக்கு கல்லைக் கொடுப்பாரா? அல்லது பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோராகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகளை அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகிலுள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா? (மத். 7:7-11) என்று கூறினார்.
உங்கள் தகுதிக்கு ஏற்ற ஒரு வேலையை உங்கள் முயற்சியால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கவலைப்படாதிருங்கள். அதைவிட பெரிய வேலையைகூட பெற்றுக்கொள்ள முடியும். ஒரே ஒரு நிபந்தனைதான் நம்பிக்கையோடு கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இந்தியாவில் வேலை தேடி கொண்டிருக்கும் உங்களுக்கு வெளிநாட்டில்கூட வேலை வாங்கித் தருவது கடவுளுக்கு எளிதான காரியம். எங்களை அணுகினால் எங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்பு அலுவலகங்களை அறிமுகப்ப டுத்துகிறோம். நீங்கள் உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்| (தி,பா:128:2) என்று கடவுள் கூறுகிறார். வேலைசெய்து உண்ண வேண்டும் என்ற உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன்.
சிலர் கிடைத்த வேலையை தக்கவைக்க தெரியாமல் இழந்து விடுகிறார்கள். சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை அசட்டை பண்ணி, வேலையை இழந்து, வறுமையில் வாடுகிறார்கள். தங்கள் உயர் அதிகாரிகளுக்கு ஒழுங்காக கீழ்படிந்து வேலை செய்யாமல்; வேலையை இழந்துவிட்டு எல்லாம் என் தலையெழுத்து என்று சொல்வதில் அர்த்தமில்லை. உங்கள் பழைய வாழ்க்கை எவ்வளவு பரிதாபமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு ஒரு வசந்த காலத்தை கடவுள் தரமுடியும், கவலைப்படாதிருங்கள்.

வெற்றிலை, புகை, மது, மாது என்று எல்லா பழக்கங்களும் எனக்கு உண்டு. இவற்றிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா ?