அவர்களை ஜாதி ஒழிப்பு பிரார்த்தனை பங்காளர்களாக சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
ஜாதி மறுப்பு கொள்கையை வெளிப்படுத்தும் T-Shirts அணியலாம். அவற்றை கிறிஸ்தவர்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு போகும்போது அணிந்து செல்லலாம். அங்கு தனியாக போவதைவிட பலர் குழுவாக இணைந்து போவது மிகவும் பயன் தரும்.
ஜாதி ஒழிப்புக் கொள்கைகள் அடங்கிய பிரசுரங்களை (TRACTS) விநியோகிக்க வேண்டும். பிரசுரங்கள் தேவையானால் தொடர்பு கொள்ளுங்கள்.
வீட்டில் இனிமேல் நடக்கும் திருமணங்கள் ஜாதி பார்க்காமல் நடத்த வேண்டும். இப்படிப்பட்டமுதிர்ச்சிக்கு பிறரை கொண்டுசெல்லவேண்டும்.
பள்ளி உட்பட எங்கு ஜாதி கேட்டாலும் ஜாதி இல்லை என்று உறுதியாக சொல்லவேண்டும்.
(ஜாதி ஒழிய வேண்டுமென்று தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் வலியுறுத்துகிறார்கள் என்னும் வக்கிர அறிக்கையை பொய்யென நிரூபிக்க உயர்த்தப்பட்டவர்களும் ஜாதிக்கொள்கையை எதிர்க்கிறார்கள் என்று வெளிப்படுத்த சில சூழ்நிலைகளில் பவுல் “நான் தர்சு பட்டணத்து யூதன்” என்று சொன்னதுபோல நாமும் சொல்லவேண்டி இருக்கலாம்.)
யாருடைய ஜாதியையும் கேட்கக்கூடாது.
ஜாதி சங்கங்களை விட்டு வெளியேற வேண்டும். சங்கத்தார் சந்தா கேட்டால் கொடுக்கக் கூடாது. ஜாதி வெறியூட்டும் பத்திரிக்கை வாசிப்பதை நிறுத்த வேண்டும்
FB, Whats app போன்ற சமூக வலைதளங்களில் Status ல் ஜாதி மறுப்பு வாசகங்களை வைக்கலாம். ஜாதி மறுப்பு கொள்கையை வெளிப்படுத்தும் Profile Picture வைக்கலாம்.
ஜாதி ஒழிப்பு பணியில்
சகோ அகத்தியன்.