055) கிறிஸ்தவர்கள் கல்வியில், பொருளாதாரத்தில் வளர்ந்தால் சாதி ஒழிந்துவிடுமே!

பதில்: சாதியை உருவாக்கி வளர்க்கும் பிராமணர்கள் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்களல்லவா! அவர்களுடைய கல்வி, பதவி, பணம் அவர்களை சாதி பெருமையிலிருந்து விடுவித்துவிட்டதா? பணவசதியுடைய நாடார்களை திருமணம் செய்வார்களா?
தாழ்த்தப்பட்டவர்களோடு தாழ்த்தப்பட்டவர்களாக கிடந்த, பார்த்தாலே தீட்டு என்று ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த *நாடார்களுக்கு* கல்வி, பொருளாதாரம் வந்ததால் அவர்களைவிட்டு சாதி ஆதிக்க உணர்வு போய்விட்டதா? கல்வியிலும், பணத்திலும் முன்னேறிய ஆதி திராவிடர்கள், நாடார்களிடம் சென்று திருமண சம்பந்தம் பேச முடியுமா?
கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைந்த நாடார்களுடன் *பிள்ளைமார்கள்* திருமண உறவு வைத்துக்கொள்வார்களா? அல்லது சாதியம் எவ்வளவு ஆபத்தானது என்று தெளிவாக தெரிந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியும், பதவியும், பணமும் வந்தவுடன் அவர்கள் தங்களை சாதியற்றவர்கள் என்று பிரகடனப்படுத்திவிட்டார்களா?
இன்று சாதி சங்கங்களை தொடங்கி நடத்திக்கொண்டிருப்போர் எல்லாரும் கல்வியறிவு அற்றவர்களா? கல்வியறிவு உடைய தாழ்த்தப்பட்ட பாஸ்டர்கள் சாதியத்தை எதிர்த்து பேசுகிறர்களா?
கல்வியும் பணமும் வந்தால் சாதி ஒழிந்து விடுமானால் சாதி ஒழிப்பின் மகிமை கல்விக்கும் பணத்துக்கும் தானே போய் சேரும். பகையையை ஒழிப்பதற்காக சிலுவையில் தன் உயிரை தியாகம் செய்த (எபே. 2:15-16) இயேசுவுக்கு எப்படி மகிமை வரும்?