076) சாதியற்றோருக்கான இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறல்லவா!

பதில்: சாதி அடிப்படையில் முற்காலத்தில் நாம் பாதிக்கப்பட்டதால், அந்த பாதிப்புக்கு இழப்பீடாக தமிழக அரசு மொத்தம் 69% இடஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் கொடுக்கிறது. இதுவே சமூக நீதியாகும். தனித்தனியே குறிப்பிட்டால்,
BC (பிற்படுத்தப்பட்டவர்): 30%
MBC (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்): 20%
SC (பட்டியல் இனத்தவர்): 18%
ST (பழங்குடியினர்): 1%
சாதி அடிப்படையில் முற்காலத்தில் நாம் பாதிக்கப்பட்டதால், அந்த பாதிப்புக்கு இழப்பீடாக தமிழக அரசு நமக்கு அதே சாதியின் அடிப்படையில் கொடுக்கிறது. இதுவே சமூக நீதியாகும். ஆனால், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடுகள் கொடுக்கப்படுவதுவரை சாதி ஒழியாது. ஆகவே, சாதி பெயர்களிலிருந்தே விடுதலை அடைய நாம் ஒரு கருத்தை அரசுக்குச் சொல்கிறோம்.
இடஒதுக்கீடு வாங்குவோரில் இரண்டு தரப்பினர் இருக்கிறார்கள்.
1) *சாதி மறுப்பாளர்கள்.*
2) *சாதி உணர்வாளர்கள்.*
இதில் சாதி உணர்வாளர்களுக்கு அரசு சாதியின் பெயரைக் கேட்டு அதன் அடிப்படையில் கொடுக்கட்டும். ஆனால், இறைவன் சாதி அடிப்படையில் மனிதனைப் பிரித்தே படைத்தான் என்ற சனாதன கொள்கையை நம்பாத சாதி மறுப்பாளர்களிடம், *”நீங்கள் என்ன சாதி?”* என்று கேட்பது கண்ணியமற்ற செயலாகும். ஆகவே, சாதி மறுப்பாளர்களுக்கென்று அரசாங்கம், “சாதியற்றோர்” என்ற சிறப்பு சான்றிதழ் வழங்கி அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும்.
*”எங்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை”* என்று மனமுவந்து ஏழைகளுக்கென்று விட்டுக்கொடுப்போரும், தற்போது OC (Open Category) – ல் இருக்கும் சாதி மறுப்பாளர்களும் NC(OC) என்ற சான்றிதழ் வாங்கலாம்.
10000 பேர் இணைந்து, *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* தமிழக அரசிடம் இந்த கோரிக்கையைத்தான் முன்வைக்கப் போகிறது. இந்த கோரிக்கையில் எந்த அநியாயமும் இல்லை.
அம்பேத்கர் 1950-ம் ஆண்டு வடிவமைத்துக்கொடுத்து அமலுக்கு வந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பலமுறை பல திருத்தங்களை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது. அதேபோல இந்த சட்டத் திருத்தத்தையும் எதிர்பார்க்கிறோம்.