080) ஒருவர் தன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்வது மனத்தாழ்மை அல்லவா!

பதில்: ஒரு அலுவலகத்தின் மிகவும் முக்கியமான, பொறுப்பான உயர் பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரி ஒருவர் செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்காக செய்யாததற்கு காரணம் கேட்டால், *”நான் உயர் அதிகாரி அல்ல; கடைநிலை ஊழியர்”* என்று சொன்னால் அது மனத்தாழ்மை ஆகுமா? இது அவருடைய பொறுப்பில்லாமையை அல்லவா காட்டுகிறது!
*’ஆதாம் ஏவாள் மூலமாகத்தான் இவ்வுலகின் மொத்த மனிதர்களையும் இறைவன் படைத்தார்’* என்னும் மனிதத் தோற்றக் கொள்கையை கிறிஸ்தவர்கள் நாம் அறிந்தபின்பும், *’சாதி அடிப்படையில் கடவுளே மனிதனை பிரித்தே படைத்திருக்கிறார்’ (பகவத்கீதை 4:13)* என்னும் இந்துத்துவப் பொய்யை நம்புவது அறியாமையல்லவா!
மூளை சரியாக இயங்கும் உங்களை வேறொருவர் *’மனநிலை சரியில்லாதவர்’* என்று அழைத்தால் *”அவர் அறியாமையால் பேசுகிறார்”* என்று விட்டுவிடுகிறோம். ஆனால் நம்மை நாமே *’மனநிலை சரியில்லாதவர்’* என்று அழைத்துக்கொள்வது மனத்தாழ்மையாகுமா?
ஒருவர் தன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்வது மனத்தாழ்மையல்ல. அது *தாழ்வு மனப்பான்மை.* கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்று தெரியாத *பகுத்தறிவு பற்றாக்குறை.*
இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு *’நீதிமான், பரிசுத்தவான்’* என்னும் பட்டத்தை பெற்றபின்பும் (எபே. 1:1, கொலோ. 1:1, பிலி. 1:1) *”நான் பாவிதான்…”* என்று பாடுவதில் நியாயம் இல்லை. அதுபோல, இயேசுவை ஏற்றுக்கொண்டுஉண்மையை உணர்ந்த நாம் நம்மை கீழ்சாதி என்று ஒத்துக்கொள்வதிலும் நியாயமில்லை.
ஒருவர் தன்னை கீழ்சாதி என்று ஒத்துக்கொள்வது தன் சாயலாக மனிதனைப் *படைத்த கடவுளை இழிவுபடுத்துவதல்லவா!*
நோய் குணமானபின்பும் *”நான் நோயாளிதான்”* என்று சொல்வது மனத்தாழ்மை அல்ல. அது உங்களை குணப்படுத்திய *மருத்துவரை இழிவுபடுத்தும் செயல்* ஆகும்.
யார் உங்களை என்ன சொன்னாலும் கிறிஸ்து உங்களை யாராக பார்க்கிறார் என்பதே முக்கியம்.
நமக்கு லாபமாக இருப்பதை *கடவுளின் புகழ்ச்சிக்காக* நஷ்டம் என்று விட்டுவிடுவதுதான் நிஜமான மனத்தாழ்மை.