084) சாதியற்றோர் என்ற சான்றிதழ் வேண்டுமென்று கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டால் தர மறுக்கிறாரே!

பதில்: தமிழ்நாட்டை அரசாட்சி செய்வது சாதி மறுப்பு கொள்கையுடைய ஒரு கட்சி (தி.மு.க) என்று சொல்லப்படும் கட்சியாக இருந்தாலும் *சாதி மறுப்பு சான்று* தருவதற்கு அவர்கள் தயங்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக, சாதியத்தை கிறிஸ்தவர்களிடமிருந்து ஒழிக்கும் நோக்கத்தில் ஒரு நபர் தனியாகச் சென்று சாதியற்றோர் சான்றிதழ் கேட்டால் கிராம நிர்வாக அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். ஒருவர் தனியாகச் சென்றால் மதிப்பு கிடைப்பதில்லை. ஆகவே நாம் பெரும் கூட்டமாகச் சென்று கேட்கக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பத்தாயிரம் பேர் கூட்டமாக சென்று கேட்டால் நிச்சயமாக அரசு நமது கோரிக்கையை நிச்சயமாக மதிக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். எனவே சாதி மறுப்பு சான்றிதழை எளிதாக வாங்குவதற்காக சாதி மறுப்பாளர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கி ஒருங்கிணைக்க முயற்சி செய்வோம்.