பதில்: சாதி உணர்வாளர்கள் மட்டும்தான் சாதி மறுப்பு புத்தகத்தை வாசிக்கவேண்டுமானால், நோயாளிகள் மட்டும்தானே மருத்துவம் படிக்கவேண்டும்!
ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஏன் மருத்துவம் படிக்கவேண்டும்? *அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?* என்ற புத்தகத்தை வாசித்தால் சாதி உணர்வாளர்களிடம் சாதிமறுப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி எளிதாக பேசமுடியும் என்பதற்காகத்தான் இந்த புத்தகத்தை வாசிக்க வலியுறுத்துகிறோம். இன்று சாதி உணர்வாளர்கள் பலவித கேள்விக்கணைகளை சாதி மறுப்பாளர்களிடம் தொடுக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தெளிவாக பதில் சொல்ல வேண்டுமல்லவா அதற்காகத்தான் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.