094) இயக்கத்தின் சார்பாக பெறப்படும் பணத்தை எதற்காக செலவிடுகிறீர்கள்?

கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம், தமிழக அரசாங்கத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம் (Society) ஆகும். இதில் முறைப்படி இணைவோர் நுழைவு கட்டணம் (Entrance Fees) செலுத்தவேண்டும் என்றும் சந்தா (Subscription) செலுத்த வேண்டும் என்றும் சங்க சட்டம் குறிப்பிடுகிறது. அதன்படி, அங்கத்தினராக இணைவோரிடம் நுழைவு கட்டணமாக ₹200 சேகரிக்கப்படுகிறது.
இந்த ₹200-க்கு இயக்கம் வெளியிட்டுள்ள *அன்புள்ளவர்கள் பிறரைக் கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?* என்ற புத்தகத்தையும், இயக்க உறுப்பினர் அடையாள அட்டையையும் கொரியர் மூலமாகவோ பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்கிறோம். இயக்க கொள்கை சார்ந்த கேள்விகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கு இயக்க உறுப்பினர்கள் பதில்சொல்ல அந்த புத்தகம் உதவுகிறது.
மாத சந்தாவாக ₹50 சேகரிக்கப்படுகிறது. ₹50-ஐ மாதம்தோறும் கொடுக்காமல் வருட சந்தாவாக கொடுக்க விரும்புவோர் ₹600 ஆக செலுத்தலாம் என்றும், ஆயுள் சந்தாவாக கொடுக்க விரும்புவோர் ₹3000 ஆக செலுத்தலாம் என்றும் பொதுக்குழுவில் (General Body) தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த தொகையை சேகரிக்கிறோம். இயக்கத்துக்கென்று நன்கொடை கொடுக்க விரும்புவோர் கொடுக்கும் தொகைகளையும் பெறுகிறோம். அவற்றுக்கான இரசீதுக்களையும் கொடுக்கிறோம்.
இயக்கத்தின் சந்தா பணத்தை, இயக்க அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு சம்பளம் கொடுக்கவும், அலுவலக வாடகை செலுத்தவும், இயக்க கூட்டங்கள் நடத்தவும், நமது புத்தகத்தை அச்சடிக்கவும் செலவு செய்கிறோம். கண்ணியத்தோடு யார் இயக்கத்தின் கணக்கு வழக்கை கேட்டாலும் கணக்கு காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.