099) சாதியை மறுப்பதால் மட்டும் ஒருவர் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா ?

பதில்: முடியாது. ஒருவர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் மட்டும் பரலோகம் போய்விடமுடியுமா? ஒருவர் திருமுழுக்கு பெற்றுக்கொள்வதால் மட்டும் பரலோகத்துக்கு போய்விடமுடியுமா? ஒருவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்வதால் மட்டும் பரலோகத்துக்கு போய்விடமுடியுமா? முழங்கால் படியிட்டு ஜெபம் செய்வதால் மட்டும் ஒருவர் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? வேதம் வாசிப்பதால் மட்டும் ஒருவர் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் மட்டும் ஒருவர் பரலோகத்துக்கு போய்விடமுடியுமா? சபைக் கூடுகைக்கு ஒழுங்காக செல்வதால் மட்டும் ஒருவர் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? கர்த்தருடைய பந்தியில் பங்கெடுப்பதால் மட்டும் ஒருவர் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? கடவுளைத் துதித்துப் பாடுவதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? வீட்டிலுள்ள சிலைகளை அகற்றுவதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? காணிக்கை கொடுப்பதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? பொய் சொல்லாமல் இருப்பதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? கெட்ட வார்த்தை பேசாமல் இருப்பதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? புகைப் பிடிக்காமல் இருப்பதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? களவு செய்யாமல் இருப்பதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? விபச்சாரம் செய்யாமல் இருப்பதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? தானதர்மம் செய்வதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? பெற்றோருக்குக் கீழ்படிவதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? மதுபானம் அருந்தாமல் இருப்பதால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? பாஸ்டர் ஆகிவிட்டால் மட்டும் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா? இயேசுவின் நற்செய்தியை ஒருவரிடம் பேசுவதால் மட்டும் நீங்கள் மீட்கப்படமுடியுமா? என்று யாராவது கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? அந்த பதிலைத்தான் உங்களுக்கும் சொல்கிறோம்.
சாதியம் மட்டும்தான் கிறிஸ்தவர்களின் குறைபாடு என்று நாங்கள் எங்குமே சொன்னதில்லையே! எல்லா பாவங்களையும் பாவங்கள் என்று பெரும்பான்மையான போதகர்களும் விசுவாசிகளும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், சாதி பேதம் கடைபிடிப்பதை ஒரு சிறு தவறு என்றுகூட பெரும்பான்மையான போதகர்களே ஒத்துக்கொள்ளவில்லையே! வரதட்சணையை கேட்டுவாங்குவது பாவம் என்று பெரும்பான்மையான போதகர்கள் போதிப்பதில்லையே!
ஒரு போதகர் கெட்ட வார்த்தை பேசிவதை ஒரு விசுவாசி கேட்டால் அவருடைய சபைக் கூடுகையில் அந்த விசுவாசி கலந்துகொள்ளமாட்டார். ஒரு போதகர் சாராயம் குடிப்பதை ஒரு விசுவாசி பார்த்தால் அவருடைய சபைக் கூடுகையில் அந்த விசுவாசி கலந்துகொள்ளமாட்டார். ஒரு பாஸ்டர் விபச்சாரம் செய்வதை ஒரு விசுவாசி பார்த்தால் அவருடைய சபைக் கூடுகையில் அந்த விசுவாசி கலந்துகொள்ளமாட்டார். ஆனால், பாஸ்டர் சாதிவெறியராக இருந்தாலும் அவருடைய அந்த பண்பாடு தவறு என்று பெரும்பான்மையான விசுவாசிகள் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லையே! அதனால்தான் சாதி மறுப்பைப் பரப்ப முக்கியத்துவம் கொடுக்கிறோம்.