எனக்கு ஞாயிற்றுக்கிழமையும் வேலை உண்டு.
ஞாயிறு ஆராதனையை முன்னிட்டு நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தாரிடம் விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கலாம். விடுப்பு கிடைக்காத பட்சத்தில் சபையில் நடக்கும் இடைக்கூட்டங்களில் பங்கெடுங்கள். அப்படியே ஞாயிற்றுக்கிழமை ஒழுங்காக விடுப்பு கிடைக்கும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க பிரார்த்தனை செய்து முயற்சி செய்யுங்கள். பரமேஸ்வரன் உங்கள் இதயத்தைப் பார்க்கிறார். கடவுளை ஞாயிற்றுக்கிழமைதான் ஆராதிக்க வேண்டும் என்றோ, சனிக் கிழமைதான் ஆராதனை நாள் என்றோ வேதாகமத்தில் எந்த வசனக் குறிப்புகளும் இல்லை. கடவுளை என்றும் எப்போதும் எங்கும் தொழுது கொள்ளலாம்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் கடவுளை ஆராதிக்க வேண்மென்றொ மற்ற நாட்களில் ஆராதிக்கக் கூடாது என்றோ சட்டம் இல்லை. ஓய்வு நாளை மனிதனுக்காக படைத்தாரே தவிர மனிதனை ஓய்வு நாளுக்காக படைக்கவில்லை. முதல் நூற்றாண்டில் விசுவாசிகள் அனுதினமும் சபையில் கூடினர் (தி.பணி. 2:41-47, 5:1-17). உங்களுக்கு புதிய வேலை தேடுவதில் சிக்கல் இருந்தால் உங்கள் சபை ஊழியரை அணுகுங்கள். நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவேண்டும்.
நான் ஒரு அரசியல்வாதி. கிறிஸ்தவம் அரசியல்வாதிகளுக்கு ஒத்துவருமா ?