மேல்ஜாதி கீழ்ஜாதி வேறுபாடு இந்து மதத்திலிருந்து உருவானது. பெரும்பாலும் இந்துக்கள்தான் தங்களுக்குள் ‘நான் மேல்ஜாதி, நீ கீழ்ஜாதி’ என்று சண்டை போடுகிறார்கள். சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபா கஷக (நானே மக்களை குண கர்ம அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரித்தேன்) என்று கண்ண பரமாத்மா கூறியதாக பகவத்கீதை கூறுகிறது. உண்மையாகவே கண்ண பரமாத்மா அப்படி கூறியிருப்பாரா? அப்படியே கூறியிருந்தால் அவரை உண்மையான பரமாத்மா என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கடவுள் பிரிந்துக்கிடக்கும் உலகத்தை சேர்த்துவைப்பார். தெய்வம், ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்து சண்டையை மூட்டி வேடிக்கை பார்ப்பவரல்ல. சரி, அது போகட்டும். கிறிஸ்தவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்று நம்மூர் இந்தியர்கள் கூறுகிறார்கள். கோமணம் கட்டிக் கொண்டிருந்த நமக்கு நல்ல உடையை அணியக் கற்றுக் கொடுத்தானே அந்த வெள்ளைக்காரன் அவன் நம்மைவிட கீழ்ஜாதி என்று கூறுகிறீர்களா? அவனுடைய வாழ்வியல் தரத்தை நம் தரத்தோடு எப்படி ஒப்பிட்டுப் பேசுகிறீர்கள்?
நம் நாட்டில் ஜாதிச்சண்டையின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் செத்துப் போனார்களே! இந்த காட்டுமிராண்டித்தனமான ஜாதிகொள்கையை தவறென்று சுட்டிக்காட்ட, பரிசுத்த வேதாகமத்தை இம்மண்ணுக்கு கொண்டுவந்த, உயர்ந்த உள்ளமுடையவர்களை கீழ்ஜாதி மக்களென்று கூறப்போகிறீர்களா? அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஐரோப்பா, இங்கிலாந்து போன்ற நாட்டிலுள்ளவர்கள் இந்தியர்களைவிட கீழ்ஜாதிமக்கள் என்று இந்தியர்கள் கூறும்போதே, இந்தியர்கள் எப்படிப்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டுக்காரர்களை விடுங்கள். இந்தியாவில் லட்சக்கணக்கான பிராமணர்கள் இயேசுவை வணங்குகிறார்களே! அவர்களும் கீழ்ஜாதியா? தமிழ்நாட்டில், கிறிஸ்தவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்ற கூற்றை தவறு என்று நிரூபிக்கும் படிக்கு சென்னையில் பிராமண பின்னணியிலிருந்து வந்த கிறிஸ்தவர்கள் சைவ ஆன்மீகக் கூடுகை ஒன்றை உருவாக்கி, அது ஓகோ என்று வளர்கிறதே! தமிழ்நாட்டில் 16,000 பிராமணர்கள் இயேசுவை தங்கள் கடவுளாக ஆராதிக்கிறார்களே!
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபின் forward caste, backward caste என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் திருமணம் செய்யுமளவிற்கு, அவர்களுடைய மனப்பாங்கும் உயர்ந்துள்ளது. ஆனால், இதே மக்கள் இந்துக்களாக இருந்தால் தங்களால், ஜாதி பார்க்காமல் ஊரறிய கலப்புமணம் செய்யமுடியுமா? கிறிஸ்துவுக்குள் மேல்ஜாதி, கீழ்ஜாதி, பிராமணன், சூத்திரன், வெளிநாட்டுக்காரன், உள்நாட்டுக்காரன், ஆரியன், திராவிடன், கறுப்பன், வெள்ளையன், ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுமில்லை. எல்லோரும் கிறிஸ்து பெருமானின் அன்புக்குமுன் சமமாக இருக்கிறார்கள் (கொலோ. 3:11). எல்லோரும் கிறிஸ்துவின் ஒரே இரத்தத்தால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசு, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கைவிடப்பட்ட, ஒதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வெறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, காயப்படுத்தப்பட்ட ஏழைகள் மீது சிறப்பான பாசம் வைத்திருந்தார். அதனால்தான், அவர், “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், ‘சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர்’, என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் நான் அனுப்பப்பட்டுள்ளேன்” (லூக். 4:18) என்றார்.
உலகத்தின் அரசர்களாலும் மதத்தலைவர்களாலும் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ (தலித்துகள்) என்று கேவலப்படுத்தப்பட்ட எளிய மக்களை விடுவிக்க ஒரு சமத்துவத் தலைவர் தேவைதானே! அதற்காகத்தான் உலகிலேயே உயர்ந்தவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் யூதகுலத்தில் பிறந்த இயேசு ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக்கடந்து எல்லாரையும் நேசிக்கிறார். இந்துமத சனாதன தர்மத்தாரால் வெறுக்கப்பட்டவர்கள் இயேசுவால் அரவணைக்கப்படுகிறார்கள். இதுதான் தெய்வீகம், உண்மையான ஆன்மீகம் என்று லட்சக்கணக்கான இந்து பிராமணர்கள் புரிந்து கொண்டு இயேசுவின் அன்புக் கொள்கையை தழுவுகிறார்கள். “இந்த அபிஷ்டு போன ஜென்மத்தில் பெரிய பாவம் செய்திருப்பான் அதனால்தான் இவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருக்கிறான்” என்று பிராமணர்களால் அவமதிக்கப்பட்டவர்களை தங்கள் சொந்த இரத்தமாக கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்தவர்களும் கிறிஸ்துவின் கொள்கைக்கு தங்களை அடிபணித்தவர்கள் தான். எனக்கு தெரிந்த ஒரு பிராமணர் கர்த்தரை ஏற்றுக்கொண்டு அருட்பணிக்காக குஜராத்துக்குப் போய், காடுகளுக்குள் வாழும் நாகரீகமில்லாத காட்டுவாசி மக்களுக்கிடையே சமுதாய முன்னேற்றப் பணி செய்கிறார். இவர் இந்துவாக இருந்தால் நாங்கள் பிராமணாள் என்று கூறி மற்ற மக்களைப் புறக்கணிப்பார். அவர் ஆண்டவருடைய அன்பால் தூண்டப்பட்டு இந்த காருண்யப் பணியைச் செய்கிறார். அன்பை பெரிதாக மதிக்கும் எம்மதத்து மக்களும் ஒரு நாள் இயேசுவே மெய்ப்பொருள் என்று கூறுவார்கள்.
ஏழைகள் மட்டும் தான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். பணக்காரர்களை உங்களால் மாற்ற முடியுமா ?