எல்லா ஆறுகளும் ஒரே கடலில் சேர்கின்றன. எல்லா கடவுள்களும் ஒன்றுதான் !
எல்லா ஆறுகளும் ஒரே கடலில்தான் கலக்கின்றன என்பது ஓரளவு சரியாக இருக்கலாம். ஆனால், எல்லா கடவுள்களும் ஒன்றே! என்ற சொற்றொடரே தவறு. பல கடவுள்கள் இல்லை. தெய்வம் ஒருவரே. கடவுள் சொன்ன அறிக்கைகளை கவனியுங்கள். தொடக்கமும் நானே முடிவும் நானே என்னையன்றி வேறு கடவுளில்லை (எசா.44:6).
என்னையன்றி கடவுள் வேறு எவருமில்லை நீதியுள்ளவரும் மீட்பளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவருமில்லை (எசா. 45:21). நானே ஆண்டவர் வேறு எவருமில்லை என்னையன்றி வேறு கடவுளில்லை (எசா. 45:5). கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே. அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே. யாருடைய துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன் (எசா. 44:24). கடவுள் ஒருவர்தான் என்று நிரூபிக்க நூற்றுக்கணக்கான வசன ஆதாரங்களைஉங்களுக்கு நான் கூறமுடியும்.
இயேசு கிறிஸ்து, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவா. 14:6) என்று உறுதியாகக் கூறினார். பரமேஸ்வரனை பற்றிய தெளிவான வெளிப்பாடு பெற்ற பேதுரு, “இயேசுவாகிய இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறெந்த பெயரும் கொடுக்கப்படவில்லை” (தி.பணி. 4:12) என்று தெளிவாக்குகிறார். “நானே வாயில்,என் வழியாய் நுழைவோருக்கு மீட்புண்டு ஆபத்தில்லை” (யோவா. 10:9) என்று இயேசு குறிப்பாக கூறுகிறார்.
நீங்கள், “வாப்பா, போப்பா” என்று செல்லமாக யாரையும் பார்த்து அழைக்கலாம். ஆனால், “உங்கள் அப்பா யார்?” என்று யாராவது கேட்டால் நிச்சயமாக ஒரே ஒரு நபரைத்தான் கூறமுடியும். அதுபோல, மொத்த உலக மக்களுக்கும் தந்தை ஒருவராகத்தான் இருக்கமுடியும். இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது வழியும் விரிவானது அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது வழியும் மிகக் குறுகலானது இதைக் கண்டுபிடிப்போர் சிலரே (மத். 7:13,14).