060. எனக்கு வயதாகிவிட்டது !

எனக்கு வயதாகிவிட்டது !

வயதாகி விட்டதால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், இந்த பெலவீன பருவத்தில் என்ன சாதித்துவிடப் போகிறோம் என்றும் நினைக்கிறீர்கள். பாரதப்பிரதமர் இந்த தள்ளாத வயதிலும் ஒரு பெரிய நாட்டை ஆட்சிசெய்கிறாரே! தன் வயதைப் பற்றி அவர் வருத்தப்பட்டால் சாதனை புரியமுடியுமா? நேரம் பிந்திவிட்டது என்று சாப்பிடாமல் தூங்கி விடுவீர்களா? மரணம் ஒரு மனிதனுடைய முடிவு அல்ல அது மறுமையின் தொடக்கம். இவ்வுலகில் பிறந்த எந்த மனிதனும் இறந்து, பின் நியாயத்தீர்ப்பு பெறுவது தெய்வீக சட்டம். நீங்கள் இளைஞராக இருந்தாலும், வயதானவராக இருந்தாலும் இந்த ஆன்மீகச் சட்டத்திலிருந்து விடுபடமுடியாது. நீர் இன்று இறந்தால் உம் ஆன்மா மோட்சத்தை சேர வேண்டுமானால், இயேசுவின் இரட்சிப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து அதன்படி வாழ்ந்து தனக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும்படி இறைவனை வணங்க வயது ஒரு தடையில்லை. வயதாகிவிட்டதென்று கருதி உங்களுக்குள் இருக்கும் பாவங்களிலிருந்து விடுதலை தேவையில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் உங்கள் மரணத்திற்குப்பின் சொர்க்கத்திற்கு போவதும், நரகத்திற்கு போவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

நான் வேளாங்கண்ணிக்கு வருடம்தோறும் போகிறேன். ஈஸ்டர், கிறிஸ்மசுக்கு தவறாமல் கோயிலுக்கு போகிறேன்.