061. நான் வேளாங்கண்ணிக்கு வருடம்தோறும் போகிறேன். ஈஸ்டர், கிறிஸ்மசுக்கு தவறாமல் கோயிலுக்கு போகிறேன்.

நான் வேளாங்கண்ணிக்கு வருடம்தோறும் போகிறேன். ஈஸ்டர், கிறிஸ்மசுக்கு தவறாமல் கோயிலுக்கு போகிறேன்.

வேளாங்கண்ணி வரை போகும் உங்களுக்கு அருகிலிருக்கும் வேதத்தை நம்பும் ஒரு ஆவிக்குரிய திருச்சபைக்கு செல்வது பெரிய சிரமமல்ல என்று நினைக்கிறேன். இந்திய அரசு ஞாயிற்றுக்கிழமையில் விடுப்பு கொடுக்கிறது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் அந்த நாளை ஓய்வுநாளென்று அறிவித்திருக்கின்றன. எனவே திருச்சபைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடவுளை ஆராதிக்க கூடிவருகின்றன. எல்லா ஞாயிற்றுக்கிழமையும் கடவுளைப்பற்றிய இறைச்செய்தியை அங்குள்ள அருட்பணியாளர் கொடுக்கிறார். இறைமக்களிடையே கடவுளைப்பற்றிய அறிவை வளர்க்கிறார். இறைமக்கள் ஒருவரையொருவர் சந்தித்து தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்ள, ஒருவருக்காக ஒருவர் கடவுளிடம் பிரார்த்திக்க இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்களும் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் திருச்சபையில் கூடி வருதல் மேன்மையானது. “சிலர் வழக்கமாகவே நம் சபைக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது. ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோம். இறுதிநாள் நெருங்கி வருவதைக் காண்கிறோம். எனவே, இன்னும் அதிகமாக ஊக்கமூட்டுவோம்” (எபி. 10:25) என்று பவுல் கூறுகிறார்.

நீங்கள் கொடுக்கும் கிறிஸ்மஸ் கேக்கை நாங்கள் சாப்பிடுகிறோம். ஆனால், எங்கள் பிரசாதத்தை நீங்கள் சாப்பிடுவதில்லையே ?