இயேசுவுக்கு முடிவில்லை என்பதை அவர் அறிந்தபடியால், “இறந்தேன்; ஆனாலும் இதோ என்றென்றும் உயிரோடிக்கிரேன்” (தி.வெ.1.18) என்றும் “உலகத்தின் முடிவுரை நான் உங்களோடு இருக்கிறேன்” (மத்.28:20) என்றும் கூறுகிறார். கிறிஸ்து உயிர்த்தெழுந்து இன்றும் அவர் செய்யும் அற்புதங்கள் மூலம் அவர் உயிரோடுருக்கிறார் என்று நாம் தெளிவாக அறிகிறோம். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளும் பலர் இயேசுவின் பெயரில் உள்ள சக்தியால் குணமாகிறார்கள். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட கொடுமைவாதிகள், தீவிரவாதிகள், விபச்சாரிகள், கொள்ளைகாரர்கள், இயேசுவின் வல்லமையால் மனம்திரும்பி வாழ்வதை நடைமுறையில் காண்கிறோமே ! மதவெறி, மொழிவெறி, கட்சிவெறி, பணவெறி, ஜாதிவெறி, பிடித்து அலைந்த மனித மிருகங்கள் இன்று இயேசுவால் தரமான மனிதர்களாக, புனிதர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களே ! இது வியப்பிற்குரியது அல்லவா ! இயேசு இன்றும் உயிரோடிக்கிறார் என்பதற்கு இதுவும் சான்றல்லவா ?
இயேசுவைப்பற்றி பவுல், “கிறிஸ்து எழுந்திருக்கவில்லை என்றால் எங்கள் போதகங்கள் முழுவதும் பயனற்றவை” ( 1 கொரி . 15:14 ). என்கிறார். “கிறிஸ்து என்றன்றைக்கும் இருக்கிறார். ( யோவா. 12 : 34 ) என்று வேதம் உறுதிப்படுகிறது. இயேசுவுக்கு “நித்திய பிதா” ( ஏசா.9:6 ) என்று வேறொரு பெயருமுண்டு. அவருடைய அரசாட்சி நித்யமானதென்று வேதம் கூறுகிறது. ( எபி. 1:8 ).