முஸ்லீம்கள் கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக் கொள்கிறார்களா ?
ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இயேசுவின் அன்பை புரிந்து கொண்டு மீட்கப்படுகிறார்கள். எனக்கு தெரிந்தே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் கிறிஸ்துவைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களைப் பட்டியலிட வேண்டுமானால் இந்தச் சிறுநூல் போதாது. இஸ்லாத்தைப் புறக்கணித்த பலர், முஸ்லீம் மதவாதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதால், அதை வெளியிட விரும்பவில்லை. எனக்குத் தெரிந்த ‘அன்சாரி’ என்ற எனது நண்பர் ஒருவர், தான் கிறிஸ்துவின் கொள்கைகளை பின்பற்றிய ஒரே காரணத்தால் தனக்கு வரவேண்டிய சொத்துரிமை எல்லாவற்றையும் குடும்பத்தார் பறித்துவிட்டனர் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் மிகவும் வேதனைப்பட்டேன். ஆனாலும் அவருடைய குடும்பத்தார் அவரைக் கொலை செய்யாமல் விட்டுவிட்டது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அநேக இஸ்லாமியர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்தால் வீட்டைவிட்டே துரத்தப்பட்டிருக்கிறார்கள். பலர் இஸ்லாமிய மதவெறியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இயேசு கூறினார்: “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் ” (யோவா 15:12); “உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மையை செய்யுங்கள் உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வாதம் பண்ணுங்கள் உங்கள் பகைவரிடம் அன்பு காட்டுங்கள் உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் இப்படி செய்தால் நீங்கள் விண்ணகத்தந்தையின் மக்கள் ஆவீர்கள்” (மத். 5:44). இந்த அன்புக் கொள்கையை பைபிளைத்தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.
பைபிளுடைய பழையஏற்பாடு முழுவதும் மக்கள் செய்த தவறுகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. அவற்றினின்று மக்களைக் காப்பாற்ற இறைவன் தன் குமாரன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவர் வந்து மக்களுக்கு அன்பைக் கற்றுக் கொடுத்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினார். அவர் வந்து சுமார் 500 ஆண்டுகளுக்குபின், அந்த அன்புக் கொள்கையை தவறு என்று மக்களுக்கு பரப்ப முகமது முயன்றார். மக்களுடைய பாவங்களுக்காக பரமேஸ்வரனே மனித வடிவத்தில் இறங்கி வந்து, தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்னும் சத்தியத்தை தவறென்று அவர் போதித்தார். ‘இயேசு இறக்கவே இல்லை’ என்று பொய்பிரச்சாரம் செய்தார். அவரது கொலைகாரக் கொள்கையை பின்பற்ற பலரை திரட்டினார்.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் அல்ல; அது ஒரு கொடிய மார்க்கம் என்றும் அன்பு, பொறுமை, மனிதநேயம், மன்னிப்பு என்ற வார்த்தைகளுக்கு அதில் இடமேயில்லை என்னும் பேருண்மையை பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அறிந்து இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். தற்பாதுகாப்புக்காக மனமாற்ற விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏனென்றால், இஸ்லாத்தை விட்டு ஒருவர் வெளியே வந்தால் அவர் கொலை செய்யப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
பழைய ஏற்பாட்டுச் சட்டத்தையும் கடவுள்தானே கொடுத்தார். ஏன் புதிய ஏற்பாட்டை உருவாக்கினார் ?