096. நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். எங்கள் பிள்ளைகளுக்கு உயர்வகுப்பிலுள்ள வாழ்க்கைத்துணை கிடைக்குமா ?

நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். எங்கள் பிள்ளைகளுக்கு உயர்வகுப்பிலுள்ள வாழ்க்கைத்துணை கிடைக்குமா ?
இந்துத்துவா கொள்கைப்படித்தான் நீங்கள் தாழ்த்தப்பட்டவராகிவிட்டீர்கள். ஆனால், மனிதனைப் படைத்த கடவுளுக்கு முன் எல்லா மக்களும் ஒரே ஜாதிதான். அந்த அருட்பிரவாகத்துக்கு முன் கீழ்ஜாதி, மேல்ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை. இந்து சனாதன கொள்கைப்படி பிரம்மாவுடைய தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள்; தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்; அவருடைய தொடையிலிருந்து தோன்றியவர்கள் வைஷ்யர்கள்; அவருடைய காலிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று மனுதர்மம் என்னும் இந்துமத புத்தகம் கூறுகிறது. ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ என்று கண்ணன் கூறியதாக பகவத்கீதையில் எழுதப்பட்டுள்ளது. ஆக, கடவுளே ஜாதிக்கொள்கையை உருவாக்கினார் என்று இந்துமதம் பிரகடனப்படுத்துகிறது. நீங்கள் இயேசுவை உங்கள் தலைவராக கடவுளாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
அவரது இரத்தத்தின் மூலம் பாவ விமோசனம் பெற்ற சபைக்குள் யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, இதற்குள் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை ஆரியன், திராவிடன் என்ற வேறுபாடுகள் இல்லை இந்தியன், வெளிநாட்டுக்காரன் என்றோ பாகுபாடுகள் இல்லை. பரமேஸ்வரனுடைய பார்வையில் நாமெல்லோரும் மனிதர்களாக இருக்கிறோம். இயேசுவின் அன்பை, இரட்சிப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களை ‘தேவனுடைய பிள்ளைகள்’ என்று வேதாகமம் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. அவ்வளவுதான். எனவே, இனிமேல் உங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று கூறாதீர்கள். அந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து முதலாவது வெளியே வாருங்கள். உங்களை நீங்களே தாழ்த்தப்பட்டவர் புறக்கணிக்கப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லி உங்கள் பிள்ளைகளையும் அந்த சமுதாய சிறைச்சாலைக்குள் அடைத்துவிடாதீர்கள்.
நம்மைப் பார்த்து பிராமணன் என்று கூறுவதோ, தமிழன் என்று கூறுவதோ, இந்தியன் என்று கூறுவதோ நமக்குப் பெருமையாக இருக்கக் கூடாது. நாம் ‘மனிதர்கள்’, ‘பகுத்தறிவு உள்ளவர்கள்’ என்று கூறுவதில் பெருமை கொள்வோம். தாழ்த்தப்பட்டவனுடைய இரத்தம் கறுப்பு நிறமா? அல்லது பிராமணனுடைய இரத்தம் பொன் நிறமா? எல்லாருடைய இரத்தமும் சிகப்பு நிறம்தானே! இந்த உலகில் யாரானாலும் உன்னை தாழ்த்தப்பட்டவன் என்று கூறலாம். ஆனால், நீயே உன்னை கீழ்ஜாதி என்று ஏற்றுக்கொண்டால் பரமாத்மாவே உன்னைக் காப்பாற்ற முடியாது. உங்களது இந்த தலைமுறையோடு ஜாதி என்னும் சிறை வாழ்க்கையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமானால் சமுதாய பாகுபாட்டு கொள்கையாகிய இந்துமத ஏற்றத்தாழ்வு வாழ்க்கை கலாச்சாரத்தை விட்டு இயேசு கொடுக்கும் விடுதலை வாழ்வை அனுபவிக்க வாருங்கள். இயேசுவை ஏற்றுக் கொள்ளும் எந்த மனிதனுக்குள்ளும் ஜாதிப் பிரிவினைக் கொள்கை இருக்க முடியாது. அப்படியே ஒரு கிறிஸ்தவன் ஜாதி பார்த்தால், அவன் எவ்வளவு பெரிய கிறிஸ்தவ நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் அவன் கிறிஸ்தவனே அல்ல. சர்வேஸ்வரனுக்கு முன் எல்லா மக்களும் ஒருதாய் பிள்ளைகள் தான். எனக்கு மிகவும் நெருக்கமான தேவஊழியர் அன்புச் சகோதரன் கோவிந்தராஜன் என்ற ஐயங்கார் பிராமணர், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளையும் பெற்று நிம்மதியாக சென்னையில் வாழ்கிறார் முதலியார், செட்டியார், வன்னியர், வெள்ளாளர் என்று எல்லா இனத்தைச் சார்ந்தவர்களும் கிறிஸ்துவை அறிந்து, அவரது இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு, சமநீதியாய் வாழும் கலையைக் கற்றுக்கொண்டு, எந்த ஜாதி என்றே பார்க்காமல் திருமணம் செய்கிறார்களே!
சென்னை K.K. நகரில் வசிக்கும் தேவஊழியர் மணி என்ற பிராமணர் இயேசுவை தன் வாழ்வின் தலைவராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அவரது சகபிராமண பூசாரிகளும், உறவினர்களும் அவரை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்த வந்தார்கள். இந்த கொலைகாரர்களை உயர்ந்த ஜாதிமக்கள் என்று உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருவன் ஏற்றத்தாழ்வு கொள்கையை நிராகரித்ததற்காக அவனை கொலைகூட செய்ய துணிந்துவிட்ட கொடியவர்களை உயர்வகுப்பினர்கள் என்று எப்படி கூறுகிறீர்கள்? ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்னும் பாரதியின் கவிதை ஏட்டளவில்தான் இருக்கிறது. அது வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டுமானால் அந்த கொள்கையுடைய தெய்வத்தை கடவுளாகத் தொழவேண்டும். உயர்ஜாதி மக்கள் தலித் பெண்களை கற்பழித்து கெடுத்தால் அது பாவமல்ல என்று மனுதர்மம் என்னும் ‘அதர்ம’ புத்தகம் கூறுகிறது. ஏழை தலித் மக்களுடைய குடிசைகளை மேட்டுக் குடியிருப்பு மக்கள் தீக்கிரையாக்கினார்கள். இந்த கொடியவர்களை மகான்கள் என்று கூறுகிறீர்களா? தன்னை காட்டிக்கொடுத்த யூதாசை சிநேகிதனே என்று அழைத்த குழந்தை உள்ளம் கொண்டவர் இயேசு. மூன்றரை ஆண்டுகள் கூடவே வாழ்ந்த பேதுரு, உயிருக்குப் பயந்து இயேசுவைத் தெரியாது என்று மறுதலித்தாலும், அவனையும் நேசித்தார். இந்த அன்பு தெய்வத்தின் அன்புக் கொள்கைகளைப் பற்றி தமிழ்நாட்டுக்கு சொல்ல வந்தார் திருத்தூதர் தோமா. அந்த தோமாவை ஈட்டியால் குத்திக் கொன்றவர்கள் பிராமணர்கள்.இது உயர்ஜாதி மக்களின் பண்பாடு என்று கூறுகிறீர்களா?
எப்பாடுபட்டாவது பசுவை காப்பாற்ற முயற்சி செய்யும் பிராமணர்கள், கடவுளின் படைப்பில் பசுவைவிட கோடி மடங்கு உயர்ந்த மனிதனை கொலை செய்ய தயங்காமல் காரியத்தை முடித்து விடுகிறார்களே! இந்த மதவாதிகளுக்கு அடிமைவேலை செய்தது போதும். வெளியே வாருங்கள். ஒரு ஆணுக்கு ஒரு பெண். ஒரு அது எந்த ஜாதியாக இருந்தாலென்ன? ஒருமுறை பெரியார் பேசும்போது, மனிதனுக்கும் மிருகத்துக்கும் திருமணம் செய்து வைப்பதுதான் கலப்பு திருமணம்; மனிதனுக்கும் மனிதனுக்கும் நடப்பது கலப்புத் திருமணமல்ல என்று கூறினார். ஆதாமுக்கு ஏற்றதுணையாக ஏவாளை கொடுத்த தெய்வம், உங்கள் பிள்ளைக்கும் ஏற்ற துணையைத் தருவார்.

எங்களுடைய திருமணங்களை நீங்களே நடத்துவீர்களா ?