040. பாவம் போக்க ஏன் இரத்தம் சிந்தப்பட வேண்டும் ?

     சாத்தானுடைய சூழ்ச்சியால், ஆதிமனிதன் கடவுளால் விலக்கப்பட்ட கனியை உண்டு ஆன்மீக உயிரை இழந்தான். அதைத் திரும்பவும் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ள பரிசுத்தமான ஓர் உயிர் விலையாக கடவுளுக்கு கொடுக்கப்பட வேண்டுமென்ற தெய்வீகத் தீர்மானத்தால், தன் தூயதிருமகனையே இயேசு என்னும் பெயரில் இவ்வுலகிற்கு மனிதவடிவில் அனுப்பி, நம் பாவங்களுக்கு பரிகாரமாக அவரது உயிரையே செலுத்தப்பட ஒப்புக்கொடுத்தார் (மத். 26:28). இயேசு தன் உயிரை சிலுவையில் தியாகம் செய்தார். ஓர் உயிரியின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. இதனால்தான், இரத்தம் சிந்துதலின்றி பாவமன்னிப்பில்லை (எபி. 9:22, லேவி. 17:11) என்று கடவுள் கூறினார்.

     நம்மைப் படைத்த மஹேஸ்வரனுக்குத்தான் நம்மைப்பற்றியும், பாவம் செய்த நம்முடைய வீழ்ச்சியிலிருந்து நம்மை மீட்க என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியும். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல மாறாக, மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும் (1பேது.1:18,19).

இரட்சிக்கப்பட பணம் கொடுக்க வேண்டுமா ?